ஒரு விவசாயி இருந்தான். அவன் ஒரு ஆட்டையும் புலியையும் வளர்த்து வந்தான். இரண்டையும் தனித்தனியாகத்தான் வைத்திருந்தான்.
ஏனெனில் புலி, ஆட்டைத் தின்றுவிடும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆட்டிற்கு வைத்திருந்த புல் தீர்ந்துவிட்டது.
எனவே புல் கட்டு வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றான். புலியையும் ஆட்டையும் பாதுகாப்பாக தன்னுடன் அழைத்துச் சென்றான்.
-
-
புல்கட்டு வாங்கி வீடு திரும்பும் போது மழை வருவது போலிருந்தது. எனவே குறுக்கு வழியில் சீக்கிரம் வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்று நினைத்தான் விவசாயி. குறுக்கு வழியில் செல்வதென்றால் ஒரு ஆற்றுப் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும்.
மிகக் குறுகலான பாலம் அது. ஒரு நேரத்தில் ஒருவர்தான் செல்ல முடியும். சுற்று வழியில் சென்றால் மழையிலும் காற்றிலும் மாட்டி துன்பப்பட வேண்டியிருக்கும். எனவே அவன் பாலத்தை நோக்கிச் சென்றான்.
-
குறுகலான பாலத்தில் அவன் மட்டுமே செல்ல முடியும். ஆனால் தன்னுடன் எதையாவது ஒன்றை மட்டும் தூக்கிச் செல்லலாம். புலி, புல்லுக்கட்டு, ஆடு – இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தன்னுடன் தூக்கிச் செல்லலாம்.
-
இப்போது என்ன செய்வது?

புலியையும் ஆட்டையும் இக்கரையில் விட்டுவிட்டு புல்லுக்கட்டை தூக்கிச் சென்றால்,புலி ஆட்டைக் கொன்றுவிடும். புல்லுக்கட்டை வைத்துவிட்டு புலியைத் தோளில் தூக்கிச் சென்றால் ஆடு புல்லுக்கட்டை தின்று சிதறடித்துவிடும்.
ஆட்டையும் புலியையும் ஒன்றாக விட்டுவிட்டுப் போகவும் முடியாது. புல்லுக்கட்டையும் ஆட்டையும் விட்டுவிட்டுப் போகவும் முடியாது. பிறகு எப்படி மூன்றையும் அக்கரை சேர்ப்பது? அவன் யோசித்து யோசித்துப் பார்த்தான். ஒரு வழியும் தெரியவில்லை. நீங்கள் ஏதாவது அவனுக்கு ஆலோசனை சொல்லுங்களேன்.
விடை இதுதான்:
-
முதலில் ஆட்டை அக்கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பிறகு தனியாகத் திரும்பி வரவேண்டும். பிறகு புலியைத் தூக்கிச் செல்லவேண்டும்.
அங்கிருக்கும் ஆட்டை எடுத்துக் கொண்டு இக்கரைக்கு வரவேண்டும். (அக்கரையிலேயே விட்டுவிட்டால் புலி ஆட்டைத் தின்றுவிடும்).
ஆட்டை இக்கரையில் விட்டுவிட்டு புல்லுக்கட்டை அக்கரைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்பு தனியாகத் திரும்பி இக்கரைக்கு வரவேண்டும்.
அடுத்தது,ஆட்டை அக்கரைக்குக் கொண்டு செல்லவேண்டும்.

இன்னொரு வழி:
-
முதலில் ஆட்டை அக்கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தனியாக இக்கரைக்கு வரவேண்டும். புல்லுக்கட்டை தூக்கிச் சென்று அக்கரையில் வைத்துவிட்டு ஆட்டுடன் இக்கரை வரவேண்டும். ஆட்டை இக்கரையில் விட்டுவிட்டு புலியை அக்கரைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பிறகு தனியாகத் திரும்பி வந்து ஆட்டைக் கொண்டு செல்ல வேண்டும்.