உவகையூட்டும் விடுகதைகள்

1) கரும் வயலில் யானைகள் மேய்ச்சல்-
அது என்ன?

2) கடுகு மடிக்க இலை இல்லை, யானை
படுக்க இடமுண்டு- அது என்ன?

3) கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன்,
பள்ள நீரைக் கண்டு பதைக்கிறான்- அது
என்ன?

4) கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில்
எழுப்பி விடுவாள்- அது என்ன?

5) கட்டைக்காளை குட்டைக்கொம்பு- கிட்டப்
போனால் முட்ட வருது- அது என்ன?

6) கழனியில் விளைந்த கதிரை, கத்தரி
போட்டு வெட்டுவார்- அது என்ன?

7) கந்தல் துணி கட்டியவன், முத்துப்
பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான்-
அது என்ன?

8-கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து,
தெருவிலே திரியும் பூ எது?

9) கரிச்சக்கட்டி வயிற்றிலே வெள்ளை
முத்துக்கள், அது என்ன?

10) கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளை
காகம் நிற்குது- அது உன்ன?

================================
விடைகள்
10)உளுந்து
9) சாதம்
8- உப்பு
7) சோளக்கதிர்
6) தலைமுடி
5) முள்
4) சேவல்
3) செருப்பு
2) சவுக்குமரம்
1) தலை,பேன்கள்